UPDATED : ஆக 01, 2026 04:32 PM
ADDED : ஆக 01, 2026 03:40 PM
அ நிறம் | அளவு
இளையான்குடி:இளையான்குடி மேல பள்ளிவாசல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1992 முதல் 1994 வரை படித்த மாணவிகள் நேற்று ஒன்று கூடி சங்கமம் நிகழ்ச்சியை நடத்தி பள்ளிக்கு தேவையான பொருட்களை வாங்க ரூ.1.50 லட்சத்தை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் காதர் பாட்ஷா, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை சம்சுநிஷா, தலைமை ஆசிரியை சாராஜான் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முன்னாள் மாணவிகள் செய்திருந்தனர்.
