ADDED : மே 09, 2024 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி டி.டி., நகர் மூன்றாவது வீதியில் பல வருடங்களாக பூட்டிக்கிடந்த ஒரு வீட்டின் பின்புறம் கிணறு இருந்தது. அவ்வழியாக சென்ற துாய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் வீட்டின் பின்புறம் இருந்து சத்தம் கேட்டதால் அங்கு பார்த்துள்ளனர். கிணற்றில் விழுந்த இளைஞர் ஒருவர் தத்தளிப்பது தெரியவந்தது.
தீயணைப்பு வீரர்கள் இளைஞரை உயிருடன்மீட்டனர். போலீஸ் விசாரணையில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட நபர் டி.டி.நகரை சேர்ந்த தங்கம்மகன் ரஞ்சித் குமார் என்பது தெரியவந்தது.