/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரிசி கடத்தல் புகார் தெரிவிக்கலாம்
/
அரிசி கடத்தல் புகார் தெரிவிக்கலாம்
ADDED : மே 01, 2024 07:53 AM
சிவகங்கை,: சிவகங்கை உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு, ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்து வருகிறது. இவற்றை சிலர் முறைகேடாக கடத்தி, கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் பெறும் நோக்கில் செயல்படுகின்றனர்.
இவர்கள் பற்றியும், ரேஷன் பொருட்கள் பதுக்கல் குறித்தும் பொதுமக்கள், 1800 599 5950 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
மாநில உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் 24 மணி நேரமும் செயல்படும் போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது.