/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் ரோடு விரிவாக்கம் பழமலைநகரில் வீடு அகற்றம்
/
சிவகங்கையில் ரோடு விரிவாக்கம் பழமலைநகரில் வீடு அகற்றம்
சிவகங்கையில் ரோடு விரிவாக்கம் பழமலைநகரில் வீடு அகற்றம்
சிவகங்கையில் ரோடு விரிவாக்கம் பழமலைநகரில் வீடு அகற்றம்
ADDED : ஆக 13, 2024 12:13 AM

சிவகங்கை : சிவகங்கை பழமலை நகரில் ரோடு விரிவாக்க பணிக்காக இடிக்கப்பட்ட வீடுகளுக்கு ஈடாக இடமும், அவற்றில் வீடு கட்டித்தர வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி, கலெக்டர் ஆஷா அஜித்திடம் மனு அளித்தனர்.
சிவகங்கை அருகே பழமலை நகரில் பல ஆண்டுகளாக 524 குடும்பத்தை சேர்ந்த சிலர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிரங்கால் முதல் சாமியார்பட்டி வரை பைபாஸ் ரோடு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த ரோடு விரிவாக்க பணிக்காக மே 27ம் தேதி பழமலை நகரில் இருந்த 9 பேரின் வீடுகளை அகற்றினர்.
இதை கண்டித்து பாதிக்கப்பட்டவர்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய பின், தலா நபருக்கு 1 சென்ட் நிலத்தை வருவாய்துறையினர் அளந்து கொடுத்தனர். ஆனால், வீட்டை இழந்த தங்களுக்கு 3 சென்ட் நிலம் வழங்கி, அதில் வீடுகள் கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து பல முறை கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் மனு அளித்துள்ளனர்.
தொடர்ந்து மனு அளித்தும்உரிய நடவடிக்கை எடுக்காததால், நேற்று காலை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சங்க தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். மாநில தலைவர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். பழங்குடியினர் பேரியக்க தலைவர் மகேஸ்வரி, பொருளாளர் சந்திரன், பொன்னையா, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட பழமலை நகர் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

