/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.10 லட்சம் மோசடி
/
பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.10 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 16, 2024 11:14 PM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் சாத்தரசன்கோட்டை அருகே மல்லலைச் சேர்ந்த பெண்ணிடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி ரூ.10.15 லட்சம் மோசடி செய்தவரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
மல்லலைச் சேர்ந்த அந்த பெண் ஆன்லைனில் வேலை தேடியுள்ளார். அவருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த எண்ணை அப்பெண் தொடர்பு கொண்டுள்ளார்.
அதில் பேசிய நபர் டெலிகிராம் மூலம் வங்கி எண்களை அனுப்பி ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் தருவதாக ஆசை காட்டியுள்ளார். அதை நம்பிய அப்பெண் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு 25 தவணைகளில் ரூ.10 லட்சத்து 15 ஆயிரத்து 290 அனுப்பினார். பணத்தைப் பெற்றுக் கொண்ட நபர் முதலீடு செய்ததற்கான லாபத்தையும் கொடுக்கவில்லை. முதலீடு பணத்தையும் திருப்பித்தரவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். மோசடி நபரை போலீசார் தேடி வருகின்றனர்.