/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் ரூ.21.67 கோடி குடிநீர் திட்டம் தீரப்போகுது தாகம்....; l 80 சதவீத பணிகள் நிறைவால் மக்கள் மகிழ்ச்சி

ADDED : நவ 06, 2024 07:59 AM

திருப்புத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் வழங்கும் நோக்கில், இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதில், தம்பிபட்டியில் 1.5 லட்சம், தென்மாப்பட்டில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை தொட்டிகள் கட்டியுள்ளனர். அதுபோன்று தென்மாபட்டு, புதுப்பட்டியில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவில் தரைமட்ட தொட்டி கட்டப்படுகிறது.
குடிநீர் ஆதாரத்திற்காக 10 இடங்களில் ஆழ்துழாய் கிணறுகள் அமைத்துள்ளனர். குடிநீர் வினியோகத்திற்காக பேரூராட்சி முழுவதும் 77.64 கி.மீ., துாரத்திற்கு குழாய்களும், மேல்நிலை தொட்டிகளுக்கு நீரேற்ற 5.8 கி.மீ., துாரத்திற்கு குழாய்கள் பதித்துள்ளனர். இதற்காக நகர் முழுவதும் தெருக்கள், சாலைகளில் குழி தோண்டி மூடியுள்ளனர். தற்போது மழை காலம் என்பதால், மூடப்பட்ட குழிகளில் மண் இறங்கி, ரோட்டில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக தெருக்களின் சந்திப்பில் போக்குவரத்திற்கு சிரமமாக உள்ளது. இந்த தெருக்களில் நான்கு சக்கர வாகனங்கள் வந்தால், பள்ளத்தில் சிக்கி தவிக்க வேண்டியுள்ளது. இரவில் டூவீலரில் வருபவர்களும் விபத்தில் சிக்குகின்றனர். தற்போது பதிக்கப்பட்ட குழாய்களில் நீர் அழுத்த பரிசோதனை 80 சதவீதம் முடிந்து விட்டது.
இதனால் விரைவாக ரோடு சீரமைப்பு பணிகளை துவக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறை ரோடுகளில் சிமெண்ட் கலவை மூலம் தற்காலிகமாக பள்ளங்களால் மூடியுள்ளனர். அதுபோன்று தெருக்களில் பராமரிக்க குடியிருப்பு வாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
திருப்புத்துார் பேரூராட்சியில் செயல்படுத்தப்படும், குடிநீர் திட்டம் மூலம் 7 மண்டலங்களாக பிரித்து குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. முதற்கட்டமாக கணேஷ் நகரில் குடிநீர் வினியோகம் செய்து பரிசோதிக்க உள்ளோம். பின்னர் அப்பகுதியில் சாலைகளில் முதலில் பள்ளங்களில் சீரமைப்பு பணிகள் மூலம் மூடப்படும்.
படிப்படியாக நகர் முழுவதும் சீரமைப்பு பணிகள் நடக்கும். மழை காலம் முடிந்த பின் புதிய ரோடுகள் போடப்படும். அதற்கான சிமெண்ட் கலவை இயந்திரங்கள் வந்துள்ளன, என்றனர்.