ADDED : ஜூன் 27, 2024 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : கிராமப்புறங்களில் தனி நபர், குழுக்களை சேர்ந்த ஊரக கண்டுபிடிப்பாளர்களுக்கு விருது வழங்கும் நோக்கில் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
சென்னை அறிவியல் நகரம் சார்பில் ஊரக கண்டுபிடிப்பாளர் விருது வழங்கப்படுகிறது.
இது குறித்து www.sciencecitychennai.in இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த விருது குறித்து ஊரக பகுதிகளில் வசிக்கும் மக்கள் தனி நபர், குழுவினர் தங்களின் கண்டுபிடிப்புகளின் முழுமையான விபரங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆக., 31க்குள் சென்னை அறிவியல் நகருக்கு சேரும் வகையில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆக., 28 க்குள் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சிப்பிரிவு அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.

