/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் ஸத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா
/
மானாமதுரையில் ஸத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா
மானாமதுரையில் ஸத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா
மானாமதுரையில் ஸத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா
ADDED : மே 17, 2024 07:05 AM

மானாமதுரை : கர்நாடக இசை கலைஞர்களின் குருவாக போற்றப்படும் ஸத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ஜீவ சமாதி மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயில், கரூர் மாவட்டத்தில் உள்ள நெரூர், கொல்கத்தா, காசி, பாகிஸ்தானில் உள்ள கராச்சி ஆகிய 5 இடங்களில் அமைந்துள்ளது.
வருடம் தோறும் இந்த இடங்களில் ஆராதனை விழா தொடர்ந்து 2 நாட்கள் நடைபெறுவது வழக்கம். மானாமதுரையில் இந்த ஆண்டுக்கான ஆராதனை விழா நேற்று காலை 8:00 மணிக்கு துவங்கியதை தொடர்ந்து சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றன.
ஏராளமான கர்நாடக இசைக் கலைஞர்களின் வாய்பாட்டு, வயலின்,மிருதங்கம் உள்ளிட்ட பல்வேறு இசைக்கச்சேரிகளும், குரு அஞ்சலி,உஞ்சவ்விருத்தி, கோஷ்டி கானம், விக்னேஸ்வர, வடுக,கன்யா சுவாசினி,தம்பதி பூஜை,இசை நிகழ்ச்சி,சொற்பொழிவு, பாராட்டு விழாக்கள் நடைபெற்று வருகின்றன.இன்று 17ம் தேதி இரவு ஆராதனை விழா முடிவடைகிறது.