/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிரத்யங்கிரா தேவி கோயிலில்சகஸ்ர சண்டி மகா யக்ஞ பூஜை இன்று முதல் ஆக. 4 வரை நடக்கும்

ADDED : ஆக 01, 2024 04:40 AM
சிவகங்கை: மானாமதுரை அருகே வேதியரேந்தல் விலக்கு பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் சகஸ்ர சண்டி மகா யக்ஞ பெருவிழா இன்று துவங்குகிறது.
இக்கோயிலில் கணபதி சுப்ரமண்யம் சாஸ்திரி தலைமையில் சகஸ்ர சண்டி மகா யக்ஞம் இன்று துவங்குகிறது. காலை 6:30 மணிக்கு மகா கணபதி ேஹாமம், பூர்வாங்கம், அங்குரார்ப்பணம், தேவதாப் பிரதிஷ்டை பூஜை நடைபெறும்.
மாலை 5:00 மணிக்கு தக்ஷின காளி, வனதுர்க்கா, பரமேஸ்வரி ேஹாமம், சதுஷ் சஷ்டி பைரவர் பூஜை, தீபாராதனை நடைபெறும். நாளை (ஆக., 2) காலை 6:30 மணிக்கு லட்சுமி, கணபதி ேஹாமம், ருத்ர ஜபம், ேஹாமம், சாம்ராஜ்ய லட்சுமி ேஹாமம், மதியம் 12:30 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.
அன்று மாலை 6:00 மணிக்கு தச மகாவித்யா ேஹாமம், காளி, தாரா, வித்யா, புவனேஸ்வரி, திரிபுர பைரவி, துாமாவதி, சின்னமஸ்தா, பகளாமுகி, ராஜமாதங்கி, கமலாத்மிகா ேஹாமங்கள், ஆவரண பூஜை, இரவு 8:30 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.
ஆக., 3 அன்று காலை 6:30 மணிக்கு ேஹாமங்கள், மாலை 4:30 மணிக்கு மகா பஞ்சமுக பிரத்யங்கிரா ேஹாமம் நடைபெறும்.
ஆக., 4 அன்று காலை 6:30 மணிக்கு சூர்ய நமஸ்காரம், நவக்ரஹ நட்சத்திர ேஹாமம், மதியம் சகஸ்ர சண்டி ேஹாமம், சுவாசினி கன்னிகா வடுக பூஜைகள் நடைபெறும். இரவு 7:00 மணிக்கு அபிேஷகம், தீபாராதனை நடைபெறும்.