/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் தடையை மீறி இறைச்சி விற்பனை
/
திருப்புவனத்தில் தடையை மீறி இறைச்சி விற்பனை
ADDED : ஏப் 22, 2024 06:23 AM

திருப்புவனம், : திருப்புவனத்தில் நேற்று மகாவீர் ஜெயந்தி நாளில் தடையை மீறி இறைச்சிகள் விற்பனை செய்யப்பட்டது.
புலால் உண்ணுவது பாவம் என்ற வள்ளலாரின் கூற்றை அமல்படுத்துவதற்காக தமிழகத்தில் வள்ளலார் தினம், அகிம்சையை போதித்த காந்தி பிறந்த தினம் உள்ளிட்ட நாட்களில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இது மட்டுமின்றி மகாவீர் ஜெயந்தி நாட்களிலும் இறைச்சிகள் விற்பனை செய்ய தடை விதித்துள்ளனர்.
மீறுபவர்கள் மீது அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகள், சுகாதார ஆய்வாளர்கள், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த சில வருடங்களாக தடை செய்யப்பட்ட நாட்களில் இறைச்சிகள் தட்டுப்பாடின்றி விற்பனை செய்யப்படுகிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் பலரும் இதனை கண்டு கொள்ளாததால் தொடர்ச்சியாக இறைச்சி விற்பனையில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். திருப்புவனத்தில் பேரூராட்சி அலுவலக வாசல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் இறைச்சி கடைகள் உள்ளன. நேற்று மகாவீர் ஜெயந்தி நாளிலும் தடையின்றி இறைச்சி விற்பனை செய்யப்பட்டன.

