ADDED : ஜூலை 28, 2024 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி : இளையான்குடி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். உழவர் மன்ற அமைப்பாளராக இருந்து வருகிறார்.
இவர் கண்மாயிலிருந்து மணல் அள்ளி விவசாய நிலங்களுக்கு பயன்படுத்துவதற்காக மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்ற நிலையில் சத்தியசீலன், மனோஜ் ஆகியோர் மூலம் டிராக்டர்களில் தனி நபர்களுக்கு லாப நோக்கத்தோடு மணல் அள்ளி செல்வதாக இளையான்குடி போலீசாருக்கு தகவல் வந்தது.
அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மேற்கண்ட இருவரையும் கைது செய்து,2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர்.