/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கூட்டு குடிநீர் திட்ட கிணறுகள் அருகே திரியும் பன்றிகளால் சுகாதாரக்கேடு
/
கூட்டு குடிநீர் திட்ட கிணறுகள் அருகே திரியும் பன்றிகளால் சுகாதாரக்கேடு
கூட்டு குடிநீர் திட்ட கிணறுகள் அருகே திரியும் பன்றிகளால் சுகாதாரக்கேடு
கூட்டு குடிநீர் திட்ட கிணறுகள் அருகே திரியும் பன்றிகளால் சுகாதாரக்கேடு
ADDED : மே 29, 2024 05:51 AM

மானாமதுரை : மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் சிவகங்கைக்கு செல்லும் வைகை கூட்டு குடிநீர் திட்ட கிணறுகளுக்கு அருகில் சுற்றி திரியும் பன்றிகளால் சுகாதாரக்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை அருகே விரகனுார் மதகணையிலிருந்து மானாமதுரை அருகே உள்ள பார்த்திபனுார் மதகணை வரை 150 க்கும் மேற்பட்ட இடங்களில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அருப்புக்கோட்டை சாயல்குடி முதுகுளத்துார் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இடைக்காட்டூர் அருகே உள்ள வைகை ஆற்று பகுதியிலிருந்து போர்வெல் மற்றும் உறை கிணறுகள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு சிவகங்கை நகருக்கு கொண்டு செல்லப்பட்டு சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இடைக்காட்டூர் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படும் பகுதிக்கு அருகில் உள்ள மேம்பாலத்திற்கு கீழ் சிலர் பன்றிகளை வளர்த்து வருகின்றனர்.
பன்றிகள் கூட்டு குடிநீர் திட்ட உறை கிணறுகள் மற்றும் போர்வெல் அருகில் திரிவதால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் பன்றிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.