/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டையில் பள்ளி கட்டடம் சேதம்
/
தேவகோட்டையில் பள்ளி கட்டடம் சேதம்
ADDED : மார் 08, 2025 04:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை அரசு மருத்துவமனை ரோட்டில் உள்ள 16 வது தொகுதி நகராட்சி நடுநிலைப்பள்ளி கட்டடம் சேதமடைந்துள்ளதால் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
இப்பள்ளி வளாகத்தில் 40 ஆண்டிற்கு முன் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டினர். இந்த கட்டடம் உரிய பராமரிப்பின்றி, சிதிலமடைந்து கிடக்கிறது.
இந்த கட்டடத்தை முற்றிலும் அகற்றாமல் விட்டுள்ளதால், பள்ளி மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். பள்ளி வளாகத்தின் நடுவே உள்ள இக்கட்டடத்தை அகற்றாமல் இருப்பதால், ஆபத்தான நிலை நீடிக்கிறது. எனவே பள்ளி வளாகத்தில் உள்ள பழைய கட்டடம், பழமையான ஆபத்தான மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.