/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வீடுகளில் நுாலகம் அமைத்த பள்ளி மாணவர்கள்
/
வீடுகளில் நுாலகம் அமைத்த பள்ளி மாணவர்கள்
ADDED : மார் 07, 2025 08:03 AM
திருப்புத்தூர்: திருப்புத்துார் கிறிஸ்துராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வீடு நுாலகம்' பராமரிக்கும் மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடந்தது.
இப்பள்ளியில் பயிலும் 45 மாணவர்கள் தங்கள் வீடுகளில் நூலகம் அமைத்துள்ளனர். ஒவ்வொருவரும் 25 புத்தகங்கள் முதல் 306 புத்தகங்கள் வரை மொத்தம் 2800 புத்தகங்களை இந்த நூலகங்களில் வைத்துள்ளனர். குடும்பத்தினர், நண்பர்கள் படிக்க இந்த நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மாணவர்களைப் பள்ளிக்கு வந்து சிவகங்கை மாவட்ட நூலகர் திருஞானம், மாவட்ட நூலக புத்தக சரிபார்ப்பு அலுவலர் வெள்ளைச்சாமி, மாவட்ட நூலக எழுத்தர் ஈஸ்வரன், நூலகர் மகாலிங்க ஜெயகாந்தன் ஆகியோர் அடங்கிய குழுவினர் வீட்டு நூலகம்' பராமரிப்பதற்கு உற்சாகப்படுத்தி வாழ்த்தினர்.
சிவகங்கையில் நடந்த புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கலெக்டர் அறிவித்த தமிழக அரசின் வீட்டு நூலகம்' விருதுக்காக இந்த 45 மாணவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. பள்ளித் தலைவர் விக்டர் மாவட்ட நூலகர் குழுவினருக்குப் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். தாளாளர் ரூபன் நன்றி கூறினார்.