/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்குஇரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்குஇரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்குஇரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்குஇரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு
ADDED : ஏப் 08, 2024 05:28 AM
சிவகங்கை : லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளில் பணிபுரியும் ஓட்டுச்சாவடி அலுவலருக்கான 2 ம் கட்ட பயிற்சி வகுப்பு சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துாரில் நடந்தது.
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரி, காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளி, திருப்புத்துாரில் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் அரசு பள்ளி, மானாமதுரை அரசு மகளிர் பள்ளி, செவன்த் டே அட்வென்டிஸ்ட் பள்ளிகளில் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், முதல் மூன்று நிலை அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது.
கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்.சிவராமன், மகளிர் திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை, காரைக்குடி தாசில்தார் தங்கமணி, மாநகராட்சி கமிஷனர் வீர முத்துக்குமார் பங்கேற்றனர். இந்த பயிற்சி கூட்டத்தில் தலா 1628 ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள், ஓட்டுச்சாவடி முதல் மூன்று நிலை அலுவலர்கள், கடைநிலை ஊழியர் 167 பேர் என 6679 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு 120 மண்டல தேர்தல் அலுவலர்கள் பயிற்சி அளித்தனர்.

