/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரூ.44.20 லட்சம் பறிமுதல் : கலெக்டர் தகவல்
/
ரூ.44.20 லட்சம் பறிமுதல் : கலெக்டர் தகவல்
ADDED : மார் 31, 2024 11:41 PM
சிவகங்கை : சிவகங்கை தொகுதியில் உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.44.20 லட்சத்தில், ரூ.7.77 லட்சம் விடுவிக்கப்பட்டது என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தேர்தல் நடத்தை விதிப்படி உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு சென்றால் பறிமுதல் செய்ய, பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மார்ச் 30 வரை அவர்கள்நடத்திய சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்து சென்றதாக ரூ.44லட்சத்து 20 ஆயிரத்து 300 யை பறக்கும் படை தாசில்தார், எஸ்.ஐ.,க்கள் பறிமுதல்செய்து அந்தந்த கருவூலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களுடன் பணத்தை எடுத்து சென்றதாக மனு செய்தோரிடம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்சிவராமன் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் உண்மை தன்மை அறிந்த பின், உரிய ஆவணங்களை சமர்பித்தோரின் ரூ.7 லட்சத்து 77 ஆயிரத்து500 திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

