/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
செல்வமகள் சேமிப்பு திட்டம் மார்ச் 10 வரை துவக்கலாம் கண்காணிப்பாளர் தகவல்
/
செல்வமகள் சேமிப்பு திட்டம் மார்ச் 10 வரை துவக்கலாம் கண்காணிப்பாளர் தகவல்
செல்வமகள் சேமிப்பு திட்டம் மார்ச் 10 வரை துவக்கலாம் கண்காணிப்பாளர் தகவல்
செல்வமகள் சேமிப்பு திட்டம் மார்ச் 10 வரை துவக்கலாம் கண்காணிப்பாளர் தகவல்
ADDED : பிப் 28, 2025 06:49 AM
சிவகங்கை: தபால் நிலையங்களில் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்கப்படுகிறது என சிவகங்கை கண்காணிப்பாளர் மாரியப்பன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு 2015ம் ஆண்டு முதல் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது.
இதில் சேர 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்காக பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் மூலம் ஒரு நிதியாண்டுக்கு குறைந்தது ரூ.250 முதல் ரூ.1.5 லட்சம் செலுத்தி கணக்கை தொடங்கலாம். இந்த திட்ட கணக்கிற்கு 8.2 வட்டி வழங்கப்படுகிறது. வருமான வரி சட்டத்தின் பிரிவு 80 சி.யின் படி ஒரு நிதி ஆண்டிற்கு ரூ.1.5 லட்சம் வரை வரி சலுகை வழங்கப்படுகிறது.
பெண் குழந்தை 18 வயதில் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின் உயர்கல்வி நோக்கங்களுக்காக கணக்கில் இருந்து 50 சதவீத பணத்தை எடுக்கலாம். கணக்கு தொடங்கிய நாளில் இருந்து 21 ஆண்டுக்கு பின் கணக்கு முதிர்ச்சி ஆகும். 18 வயது நிரம்பிய பின் திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன் அல்லது திருமணம் முடிந்து 3 மாதத்திற்குள் கணக்கை முடித்து கொள்ள வழி உண்டு.
சிவகங்கை மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பயன்பெறும் விதத்தில் மார்ச் 10ம் தேதி வரை அனைத்து தபால் நிலையங்களிலும் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகளை துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு வீதம் ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் வரை சேரலாம், என்றார்.