/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் ரோட்டோர பள்ளத்தால் தொடர் விபத்து
/
சிவகங்கையில் ரோட்டோர பள்ளத்தால் தொடர் விபத்து
ADDED : மே 15, 2024 06:24 AM

சிவகங்கை : சிவகங்கை - மானாமதுரை ரோட்டில் மருத்துவ கல்லுாரி அருகே சிவகங்கை நகராட்சியால் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாததால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
சிவகங்கை - மானாமதுரை ரோட்டில் பொது மயானம் அருகே குடிநீர் குழாய் சரி செய்ய நகராட்சி சார்பில் பள்ளம் தோண்டப்பட்டது.
பள்ளத்தைச் சுற்றி எந்தவித தடுப்பும் இல்லாமல் திறந்த வெளியாக இருக்கிறது.
இந்த ரோட்டில் தான் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல வேண்டும். ரோட்டோரத்தில் உள்ள இந்த பள்ளத்தால் இரவில் வரக்கூடிய விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.
நகராட்சி நிர்வாகம் பள்ளத்தை சுற்றி தடுப்பு அமைத்து பணியை மேற்கொள்ள வேண்டும்.

