/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மருத்துவமனையில் சர்வர் பிரச்னை ஓபி சீட்டு பதிவதில் சிக்கல்
/
மருத்துவமனையில் சர்வர் பிரச்னை ஓபி சீட்டு பதிவதில் சிக்கல்
மருத்துவமனையில் சர்வர் பிரச்னை ஓபி சீட்டு பதிவதில் சிக்கல்
மருத்துவமனையில் சர்வர் பிரச்னை ஓபி சீட்டு பதிவதில் சிக்கல்
ADDED : மார் 11, 2025 05:03 AM
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சர்வர் பிரச்னையால் நோயாளிகள் ஓபி சீட்டு பதிவு, டாக்டர்கள் நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகளை கணினியில் பதிவு செய்வதில் சிரமம் ஏற்பட்டது.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அடிக்கடி சர்வர் பிரச்னை ஏற்படுவதால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெறும் சூழல் ஏற்படுகிறது. நேற்று காலை 8:00 முதல் மதியம் 12:00 வரை அரசு மருத்துவமனையில் சர்வர் பிரச்னை ஏற்பட்டது.
இங்கு புறநோயாளிகளுக்கு பெயர், வயது, நோய் குறித்த தகவல் அடங்கிய ஓபி சீட்டு மருத்துவத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அந்த ஓபி சீட்டின் மூலம் நோயாளி சமந்தப்பட்ட டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
டாக்டர்கள் நோயாளியின் ஓபி சீட்டின் உள்ள பதிவெண்களின் அடிப்படையில் நோயாளியின் விவரங்களை பதிவேற்றம் செய்து அதிலேயே அவர்களுக்கான மாத்திரை மருந்துகளை குறிப்பிடுவார். நோயாளிகள் அந்த ஓபி சீட்டை வைத்து மருந்தகங்களில் தங்களுக்கு உரிய மருந்தை பெற்று செல்ல வேண்டும்.
இந்த ஆன்லைன் பதிவால் ஒருவருடைய முந்தைய நோய்குறித்த பராமரிப்பும் அவருக்கும்மாதாமாதம் வழங்க வேண்டிய மருந்து மாத்திரை குறித்தும் தகவல் பெறுவது சம்பந்தப்பட்ட டாக்டர்களுக்கும் நோயாளிகளுக்கும் எளிதாக இருந்தது.
நேற்று அரசு மருத்துவமனையில் உள்ள சர்வர் பிரச்னையால் நோயாளிகளும் டாக்டர்களும் சிரமப்பட்டனர். 100க்கும் மேற்பட்ட புறநோயாளிகள்நீண்ட நேரமாக காத்திருந்து ஓபி சீட்டு பதியாமல் டாக்டரை பார்த்து சென்றனர்.