/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோடையில் எள் பயிரிடலாம்: இணை இயக்குனர் தகவல்
/
கோடையில் எள் பயிரிடலாம்: இணை இயக்குனர் தகவல்
ADDED : ஏப் 29, 2024 11:52 PM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் கோடையில் மழை குறைவாக இருப்பதால், குறைந்த செலவில் 50 எக்டேரில் எள் பயிரிடும் திட்டம் உள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் தனபாலன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: குறைந்த நீரில் சாகுபடி செய்து, அதிக லாபம் ஈட்டலாம். 85 நாட்கள் பயிர் தான். ஏக்கருக்கு 2 கிலோ விதை போதும். எள் அனைத்து வகை மண்ணிலும் நன்றாக வளரும். டி.எம்.வி., 3, 4, 7 ஆகிய ரகங்கள் உள்ளது. சித்திரையில் இரு முறை கோடை உழவு செய்து, மண்ணை நன்கு கலைத்து விட வேண்டும்.
விதை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த உயிர் பூஞ்சான் கொல்லி மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற விகிதத்தில் விதையுடன் கலந்து நேர்த்தி செய்ய வேண்டும். சலித்த மணலை விதையின் அளவுக்கு சம அளவு கலந்து சீராக நிலத்தில் துாவ வேண்டும். 15 ம் நாள் 15 செ.மீட்டர் இடைவெளி வைத்து செடியை கலைத்துவிட வேண்டும்.
விதைத்த 30 வது நாள் 30 செ. மீ., இடைவெளி வைத்து மீண்டும் ஒரு முறை செடியை கலைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அதிக கிளைகள் வெடித்து அதிக எள் காய்கள் பிடிக்கும்.

