ADDED : ஏப் 18, 2024 06:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை ஷீரடி சாய்பாபா கோவிலில் ஷீரடி சாய்பாபா ஜெயந்தியை முன்னிட்டு சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை, பூஜை நடந்தன.
நேற்று இரவு ஷீரடி சாய்பாபா உற்சவர் தங்க ரதத்தில் வீற்றிருக்க பக்தர்கள் சாய்ராம் கோஷமிட்டு இழுத்தனர். மூலவருக்கும் உற்சவருக்கும் தீபாராதனை நடந்தன. கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் பங்கேற்றனர்

