/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடியில் மாற நாயனார் குருபூஜை சிவனடியார்கள் பங்கேற்பு
/
இளையான்குடியில் மாற நாயனார் குருபூஜை சிவனடியார்கள் பங்கேற்பு
இளையான்குடியில் மாற நாயனார் குருபூஜை சிவனடியார்கள் பங்கேற்பு
இளையான்குடியில் மாற நாயனார் குருபூஜை சிவனடியார்கள் பங்கேற்பு
ADDED : செப் 03, 2024 04:34 AM

இளையான்குடி, : இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் ஞானாம்பிகை அம்மன் கோயிலில் நேற்று நடைபெற்ற மாற நாயனார் குருபூஜை விழாவில் ஏராளமான சிவனடியார்கள், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
63 நாயன்மார்களுள் ஒருவரான இளையான்குடி மாற நாயனார் குருபூஜை விழா சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட ராஜேந்திர சோழீஸ்வரர், ஞானாம்பிகை கோயிலில் நேற்று காலை துவங்கியது. காலை 9:00 மணிக்கு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு பூஜை நடைபெற்று மூலவர் ராஜேந்திர சோழீஸ்வரர், ஞானாம்பிகை அம்பாள், மாறநாயனார், புனிதவதி அம்பாள், உற்சவமூர்த்திகளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனை, தீபாராதனை நடைபெற்றது.
மாலை 6:00 மணிக்கு திரு ஆனைக்கா சிவ.ராகவனின் ஆன்மிக சொற்பொழிவும், இரவு 8:30 மணிக்கு மாறநாயனார் புராணம் வாசித்து நாயனாருக்கு சிவபெருமான் அருளிய ஜோதிக்காட்சி காண்பித்து இரவு 10:00 மணிக்கு கைலாய வாத்தியங்கள் முழங்க உற்ஸவமூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது.
விழாவில் இளையான்குடி பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்களும், சிவனடியார்களும் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இளையான்குடி மாறநாயனார் அடியார் திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர்.