நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி : இளையான்குடி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர், சிறப்பு மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், செவிலியர்கள் மற்றும் இரவு காவலர், கீழ்நிலை ஊழியர்கள் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டுமென்றும், தாலுகா மருத்துவமனைக்கு ஏற்ற வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க். கம்யூ. சார்பில் கையெழுத்து இயக்கம் தாலுகா செயலாளர் ராஜூ தலைமையில் நடந்தது.
மாவட்ட செயலாளர் கருப்புசாமி கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், மாவட்ட குழு உறுப்பினர் அழகர்சாமி, ஜெயந்தி, தாலுகா குழு உறுப்பினர்கள் ராஜா, சந்தியாகு சாமிநாதன், ஆறுமுகம், மற்றும் நிர்வாகிகள் மக்களிடம் கையெழுத்து பெற்று மாவட்ட மருத்துவ துறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

