/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை லோக்சபா தொகுதி ஓட்டுக்கள் 14 டேபிள்களில் சுற்று வாரியாக '‛ரிசல்ட்'
/
சிவகங்கை லோக்சபா தொகுதி ஓட்டுக்கள் 14 டேபிள்களில் சுற்று வாரியாக '‛ரிசல்ட்'
சிவகங்கை லோக்சபா தொகுதி ஓட்டுக்கள் 14 டேபிள்களில் சுற்று வாரியாக '‛ரிசல்ட்'
சிவகங்கை லோக்சபா தொகுதி ஓட்டுக்கள் 14 டேபிள்களில் சுற்று வாரியாக '‛ரிசல்ட்'
ADDED : மே 07, 2024 05:21 AM
சிவகங்கை: சிவகங்கை லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் பணி நடக்கும் காரைக்குடியில் சட்டசபை தொகுதிக்கு 14 டேபிள்கள் அமைத்து ஓட்டுக்களை எண்ணி,சுற்று வாரியாக அறிவிக்கப்பட உள்ளது.
சிவகங்கை லோக்சபா தொகுதியின் கீழ் சிவகங்கை,காரைக்குடி,மானாமதுரை (தனி),திருப்புத்துார், ஆலங்குடி,திருமயம் ஆகிய 6 தொகுதியில் 16 லட்சத்து 33 ஆயிரத்து 857 வாக்காளர்களில், 10 லட்சத்து 49 ஆயிரத்து 635 பேர் 64.25 சதவீத ஓட்டுக்களை பதிவு செய்தனர்.
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையமான காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு இன்ஜி., கல்லுாரி, அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தை சுற்றிலும் 240 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள 'ஸ்ட்ராங்க்' ரூம் முன் துணை ராணுவ படையினர் நிறுத்தப்பட்டு, அங்கும் கேமரா கண்காணிப்பில் உள்ளது.
இன்னும் 27 நாட்களே...
காரைக்குடியில் ஓட்டு எண்ணும் பணி ஜூன் 4 ல் நடக்கிறது. அதற்கு இன்னும் 27 நாட்களே உள்ளது. திருமயம் - 274, ஆலங்குடி -242, காரைக்குடி - 346, திருப்புத்துார் - 334, சிவகங்கை - 353, மானா மதுரை - 324 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் 14 டேபிள்கள் அமைத்து ஓட்டு எண்ணும் பணி நடைபெற உள்ளது.
ஒரு டேபிளுக்கு ஒரு ஓட்டு எண்ணும் அலுவலர், 'மைக்ரோ அப்சர்வர்' என 3 பேர் ஈடுபடுவர். 6 சட்டசபை தொகுதிக்கும் 84 டேபிள்கள் அமைத்து ஓட்டு எண்ணும் பணி நடக்க உள்ளது. அதிகபட்சம் சிவகங்கை சட்டசபை தொகுதிக்கு மட்டுமே 20 சுற்று வரை செல்லும். மற்ற தொகுதி ஓட்டுக்கள் அதற்குள் எண்ணி முடிக்கப்படும் என தெரிவிக்கின்றனர்.