/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எஸ்.கரிசல்குளம் கோயில் பொங்கல் விழா துவக்கம்
/
எஸ்.கரிசல்குளம் கோயில் பொங்கல் விழா துவக்கம்
ADDED : மார் 30, 2024 04:23 AM

மானாமதுரை, : மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழா நேற்று துவங்கியது. பொங்கல் விழா வரும் ஏப்.5ம் தேதி நடைபெற உள்ளது.
அன்றைய தினம் எஸ். கரிசல்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் தீச்சட்டி,பால்குடம், ஆயிரங்கண் பானை, கரும்பு தொட்டில், மாவிளக்கு எடுத்தல்,பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தி ஆடு,கோழிகளை பலியிட்டு அம்மனை வழிபட உள்ளனர். ஏப்.10ம் தேதி தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவு பெற உள்ளது.விழா நாட்களின் போது கோயில் வளாகத்தில் அன்னதானமும் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி பாண்டி, போதும் பொண்ணு செய்து வருகின்றனர்.

