ADDED : மார் 28, 2024 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலை., மீன்வள அறிவியல் துறை கேரள மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் மீன்வள அறிவியல் துறையில் தொழில் சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழா கருத்தரங்கு கூடத்தில் நடந்தது.
மீன்வள அறிவியல் துறைத்தலைவர் பிரபு வரவேற்றார். மத்திய மீன்வள தொழில் நுட்ப நிறுவன அமைப்புச் செயலர் ஜெயந்தி பேசினார். பல்கலை., தேர்வாணையர் ஜோதிபாசு. பல்கலை., தொலைநிலை மற்றும் இணைய வழி கல்வித் திட்ட இயக்குனர் கண்ணபிரான் பேசினர். மீன்வள அறிவியல் துறை உதவி பயிற்றுநர் குமார் நன்றி கூறினார்.

