ADDED : ஆக 12, 2024 03:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, : காளையார்கோவில் புனித மைக்கேல் பாலிடெக்னிக் கல்லுாரியில் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி, மதிப்பீடு விழா நடந்தது.
கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் சேக்தாவூத் தலைமை வகித்தார். முதல்வர் மகேந்திரன் வரவேற்றார். புனித மைக்கேல் கல்வி குழும தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், முதன்மை செயல் அலுவலர் பிரிஜெட் நிர்மலா சிறப்பு வகித்தனர். மெக்கானிக்கல் துறை தலைவர் அசோக் ஏற்பாட்டை செய்திருந்தார்.
விரிவுரையாளர் சத்யபிரியா நன்றி கூறினார். கல்லுாரி பேராசிரியர்களுக்கு 5 நாட்கள் அகில இந்திய தொழில் நுட்ப கழகம் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டது. பின்னர் அதற்கான மதிப்பீடு செய்யப்பட்டது.