/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரோட்டோர தீயால் புகை மூட்டம்; வாகன ஓட்டிகள் அவதி
/
ரோட்டோர தீயால் புகை மூட்டம்; வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மே 06, 2024 12:23 AM

காரைக்குடி : காரைக்குடி தேவகோட்டை ரஸ்தா அருகே நெடுஞ்சாலையோரம் இருந்த புற்கள் செடிகளில் தீ பிடித்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைந்தனர்.
காரைக்குடி தேவகோட்டை செல்லும் சாலையில் தேவகோட்டை ரஸ்தா அரியக்குடி ஆர்ச் உள்ளது. இச்சாலையை ஒட்டி குடிகாத்தான் கண்மாய் உள்ளது. கண்மாயில் தண்ணீர் இல்லாததால் புற்கள் நிறைந்து காணப்படுகிறது.
சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுவது, செடி கொடிகள் கருவேல மரங்கள் வளர்ந்து கிடக்கிறது. இந்நிலையில் தற்போது கடும் வெயில் தாக்கம் நிலவி வருகிறது.
கொளுத்தி எடுக்கும் வெயிலால் நேற்று மதியம் கண்மாயில் காய்ந்த புற்களில் தீப்பிடித்தது.
இந்த தீயானது புற்கள் முழுவதும் பரவி குப்பைகள் மற்றும் கருவேல மரங்கள் செடிகள் முழுவதும் 2 மணி நேரம் வரை தீப்பிடித்து எரிந்தது. புகை மூட்டமாக காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.