ADDED : பிப் 22, 2025 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் வீட்டுக்குள் புகுந்த 10 அடி நீள சாரைப்பாம்பு பிடிப்பட்டது.
இப்பேரூராட்சியில் கீழக்காடு ரோடு தெருவில் கார்த்திக் என்பவரது வீட்டில் நேற்று 10 அடி நீள மஞ்சள் சாரைப்பாம்பு புகுந்தது.
இது குறித்து அப்பகுதி மக்கள் சிங்கம்புணரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடித்து பிரான்மலை வனப்பகுதியில் விட்டனர்.