/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விதிகளை மீறி அள்ளப்படும் மண்: விவசாயிகள் அதிர்ச்சி
/
விதிகளை மீறி அள்ளப்படும் மண்: விவசாயிகள் அதிர்ச்சி
விதிகளை மீறி அள்ளப்படும் மண்: விவசாயிகள் அதிர்ச்சி
விதிகளை மீறி அள்ளப்படும் மண்: விவசாயிகள் அதிர்ச்சி
ADDED : ஜூலை 01, 2024 10:09 PM
திருப்பாச்சேத்தி:
திருப்பாச்சேத்தி அருகே நிலத்தை சமன்படுத்தும் பணி என்ற பெயரில் ஒரே நேரத்தில் ஏழு இயந்திரங்களை பயன்படுத்தி சவடு மண் அள்ளப்படுவது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பாச்சேத்தி அருகே நிலத்தை விவசாயம் செய்வதற்கு ஏற்ப சமன்படுத்தும் போது கிடைக்கும் உபரி மண்ணை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரி விண்ணப்பித்ததையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒன்றரை மீட்டர் ஆழத்திற்கு மண்ணை வெட்டியெடுத்து சமன்படுத்தி கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 நாட்களாக ஒரே நேரத்தில் ஏழு மண் அள்ளும் இயந்திரம்மூலம் மண் அள்ளும் பணி தொடங்கியுள்ளது. தினசரி ஏராளமான லாரிகள்மூலம் மண் அள்ளப்பட்டு செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. நிபந்தனைகளை மீறி மண் அள்ளப்படுவதால் அருகில் உள்ள மற்ற விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.
ஒன்றரை மீட்டர் ஆழம் என்ற விதியை மீறி நான்கு நாட்களிலேயே ஐந்து மீட்டர் ஆழத்திற்கு மண் அள்ளப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் இரண்டு இயந்திரத்திற்கு மேல் பயன்படுத்த கூடாது என்ற விதியை மீறி ஏழு இயந்திரங்களை கொண்டு மண் அள்ளப்படுகிறது.
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாயில் பாதை அமைத்து லாரிகள் இயக்கப்படுகின்றன. மழை காலங்களில் கண்மாயின் உட்புறம் தண்ணீர் உறிஞ்ச வாய்ப்பில்லாததால் சுற்றுவட்டார கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறையும் என விவசாயிகள் கருதுகின்றனர்.
கண்மாய் வழியாக லாரிகள் செல்வதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து திருப்பாச்சேத்தி போலீசார் குவாரி உரிமையாளருக்கு ஆதரவாக விவசாயிகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததாகவும் விவசாயிகள் புலம்புகின்றனர்.
மண் அள்ளப்படும் பகுதியில் விதிகள் மீறப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் விரும்புகின்றனர்.