/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு படிப்பு வட்டத்தில் சிறப்பு வகுப்பு

ADDED : ஜூன் 29, 2024 05:41 AM
சிவகங்கை, : டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2 ஏ நிலையில் உள்ள 2327 காலிப்பணியிடத்திற்கான போட்டி தேர்வுக்குரிய பயிற்சி வகுப்பு சிவகங்கையில் ஜூலை 1ல் துவங்குகிறது.
டி.என்.பி.எஸ்.சி., மூலம் காலியாக உள்ள குரூப் 2 மற்றும் 2 ஏ பணியிடங்களுக்கான போட்டி தேர்வினை விரைவில் நடத்த உள்ளது. காலியாக உள்ள 2327 பணியிடங்களுக்கான தேர்வில் பங்கேற்க உள்ள பட்டதாரிகளுக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள படிப்பு வட்டத்தில் ஜூலை 1 முதல் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படும். இப்பயிற்சியின் போது நேரடி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். ஜூலை 1 ம் தேதி மதியம் 3:00 மணிக்கு படிப்பு வட்டம் துவக்கி வைக்கப்படும். இப்படிப்பு வட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்புவோர் படிப்பு வட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராதாகிருஷ்ணனிடம் 99656 81698 ல் பெயர்களை பதிவு செய்யலாம்.