/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டையில் மாசி மகம் ரத்தின வேல் சிறப்பு பூஜை
/
தேவகோட்டையில் மாசி மகம் ரத்தின வேல் சிறப்பு பூஜை
ADDED : மார் 13, 2025 05:02 AM

தேவகோட்டை: மாசி மகத்தை முன்னிட்டு குன்றக்குடியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும்ரத்தினவேல் நேற்று தேவகோட்டை கொண்டு வரப்பட்டது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளை தொடர்ந்து ரத்தினவேலிற்கு பக்தர்கள் பன்னீர் அபிஷேகம், சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டனர்.
ரத்தினவேல் ஊர்வலமாக நகர பள்ளிக்கூடம் எனும் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு முருகப்பெருமான் கையில் அணிவிக்கப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ரத்தின வேலை விபூதி பையில் இருந்து வெளியே எடுத்தால் 11 மூடை அரிசியில் சாதம் தயார் செய்து வழங்க வேண்டும் என்ற ஐதீகப்படி சாதம் வடித்து மகேஸ்வர பூஜையை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.