நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி:காரைக்குடி அருகே ஸ்ரீராஜராஜன் பி.எட்., கல்லுாரியில் ஆண்டு, விளையாட்டு, கலை விழா நடந்தது.
புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லுாரி பேராசிரியர் அய்யாவு தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் அங்கையற்கண்ணி முன்னிலை வகித்தார். மகளிர் பி.எட்., கல்லுாரி முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். வேலுார் நீதிமன்ற நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கினார். கபடி பயிற்சியாளர் கவிதா, பாடகர் ஸ்ரீதர் சேனா பங்கேற்றனர். பாலசுந்தரி தொகுத்து வழங்கினார். செல்வ கணேசன் நன்றி கூறினார்.