/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வனக்காடுகளில் தண்ணீரின்றி பலியாகும் புள்ளி மான்கள்
/
வனக்காடுகளில் தண்ணீரின்றி பலியாகும் புள்ளி மான்கள்
வனக்காடுகளில் தண்ணீரின்றி பலியாகும் புள்ளி மான்கள்
வனக்காடுகளில் தண்ணீரின்றி பலியாகும் புள்ளி மான்கள்
ADDED : ஏப் 23, 2024 12:11 AM
மானாமதுரை : மானாமதுரை, இளையான்குடி வனக்காடுகளில் உள்ள விலங்குகளுக்கு தண்ணீர் தொட்டி அமைக்க வனத்துறை முன்வரவேண்டும்.
மானாமதுரை அருகே கிருங்காங்கோட்டை, வேலூர், பெரியகோட்டை, மேலப்பசலை கிராமங்களில் புள்ளி மான்கள் வாழ்கின்றன.
தற்போது கடும் கோடை வெயிலின் தாக்கத்தால், வனக் காடுகளுக்குள் விலங்குகளுக்கு குடிக்க தண்ணீர் இன்றி தவித்து வருகின்றன.
இதற்காக குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் புள்ளி மான்கள் நாய்களால் கடிக்கப்பட்டு உயிரிழக்க நேரிடுகின்றன.
இப்பகுதியில் 10 க்கும் மேற்பட்ட மானகள் வரை கடந்த ஆண்டில் பலியாகியுள்ளன.
கோடையில் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் மான்களை பாதுகாக்க, வனக்காடுகளுக்குள் குடிநீர் தொட்டிகளை வைக்க வேண்டும்.