
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை நடுத்தெரு மஞ்சனைப்பேச்சி முத்து மாரியம்மன் கோவில் முளைக்கொட்டு திருவிழா 13 ந்தேதி கணபதி ஹோமம், காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. திருவிழாவின் போது சங்காபிஷேகம், பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது.
வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் வீதி உலா வந்தார். தினமும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் கரகம் முக்கிய வீதிகளில் உலா வந்து பூஜைகள் நடந்தன. நிறைவு நாளன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு பக்தர்கள் முளைப்பாரி, கரகம் எடுத்து வந்து முளைக்கொட்டு செய்து அம்மனை வழிபட்டனர்.