/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அதிநவீன கருவியால் ரோடு அளவிடும் பணி தொடக்கம்
/
அதிநவீன கருவியால் ரோடு அளவிடும் பணி தொடக்கம்
ADDED : ஆக 25, 2024 04:45 AM

காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சியானதைத் தொடர்ந்து ரோடுகளை அதிநவீன கருவி மூலம் அளவிடும் பணி தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் புதுக்கோட்டை நாமக்கல் திருவண்ணாமலை காரைக்குடி உட்பட 4 நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. காரைக்குடியில் உள்ள 36 வார்டுகளில் 976 சாலைகள் உள்ளன. பரப்பளவு 13.75 சதுர கி.மீ., ஆகும்.
காரைக்குடி மாநகராட்சியானதை தொடர்ந்து சாலைகளை அளவிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதிநவீன ட்ரோன் மூலம் சாலைகளை அளவிடும் பணி நடைபெறுகிறது. இதன் மூலம் தார்ச் சாலை, சிமென்ட் சாலை உட்பட நகரில் அனைத்து சாலைகளின் அளவுகளை துல்லியமாக கணக்கிட முடியும். அளவீடு பணியை மேயர் முத்துத்துரை தொடங்கி வைத்தார்.
இதில் கமிஷனர் சித்ரா, துணை மேயர் குணசேகரன் முன்னிலை வகித்தனர். பொறியாளர் இசக்கி, உதவி பொறியாளர் பாலசுப்ரமணியன், உறுப்பினர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.