/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசின் கனவு இல்லம் திட்டத்திற்கு கூடுதல் பணியாளர்கள் நியமிக்கக்கோரி போராட்டம்
/
அரசின் கனவு இல்லம் திட்டத்திற்கு கூடுதல் பணியாளர்கள் நியமிக்கக்கோரி போராட்டம்
அரசின் கனவு இல்லம் திட்டத்திற்கு கூடுதல் பணியாளர்கள் நியமிக்கக்கோரி போராட்டம்
அரசின் கனவு இல்லம் திட்டத்திற்கு கூடுதல் பணியாளர்கள் நியமிக்கக்கோரி போராட்டம்
ADDED : ஜூன் 27, 2024 02:19 AM
சிவகங்கை:அரசு கனவு இல்லம் திட்டத்திற்கு இணை இயக்குனர் முதல் பணி பார்வையாளர் வரை கூடுதல் பணியாளர்கள் நியமிக்கும் வரை போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழக அளவில் அரசின் கனவு இல்லம்' திட்டம் மூலம் 1 லட்சம் வீடுகள் வரை கட்டித்தரப்பட உள்ளது. இதற்கான பயனாளிகளை தேர்வு செய்து ஜூலை 15 க்குள் வீடு கட்டுவதற்கான பணி உத்தரவை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஊரக வளர்ச்சித்துறையில் பணிச்சுமையில் பணியாளர்கள் தவிக்கும் நிலையில் கனவு இல்லம் கட்டுதல், பழைய வீடுகளை புனரமைப்பதில் சிக்கல் ஏற்படும்.
இத்துறையில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலை நீடிக்கிறது. எனவே இவ்விரு திட்டத்தை செயல்படுத்த கூடுதல் அதிகாரிகள், பணியாளர்களை நியமிக்க கோரி ஊரக வளர்ச்சித்துறையினர் 2 கட்ட போராட்டம் நடத்த உள்ளனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் எஸ்.ரமேஷ் கூறியதாவது:
அரசின் கனவு இல்ல திட்டத்தை செயல்படுத்த மாநில அளவில் இணை இயக்குனர், உதவி இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர், உதவியாளர், கணினி உதவியாளர், மாவட்ட வாரியாக இதுபோன்ற தேவையான பணியிடங்கள் மட்டுமின்றி உதவி பொறியாளர், பணி பார்வையாளர் என ஒவ்வொரு 500 வீடுகளுக்கும் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்தோம். இது குறித்த அறிவிப்பு சட்டசபை மானியக்கோரிக்கையில் வெளியிடவில்லை. இதனை வலியுறுத்தி இன்று (ஜூன் 27) வட்டார அளவில் ஆர்ப்பாட்டமும், ஜூலை 1 ல் மாவட்ட தலைநகரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம், என்றார்.