/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வீட்டு மனை பட்டா கேட்டு போராட்டம்
/
வீட்டு மனை பட்டா கேட்டு போராட்டம்
ADDED : ஆக 28, 2024 06:42 AM

சிவகங்கை : இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி சிவகங்கை தாலுகா அலுவலகம் முன் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், சிவகங்கை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் வீட்டு மனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி தாசில்தார் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க ஒன்றிய செயலாளர் முத்துக்கருப்பன் தலைமை வகித்தார்.
ஒன்றிய தலைவர் தனசேகரன், பொருளாளர் மகாலிங்கம் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் மணியம்மா, செயலாளர் பொன்னுச்சாமி பங்கேற்றனர். வீட்டு மனை இல்லாத ஏழைகளுக்கு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். பயனாளிகளுக்கு அரசு இலவசமாக வீடுகள் கட்டித்தர வேண்டும். வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வேலை அட்டை வழங்கி, வேலை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தாசில்தார் சிவராமன் பேச்சு வார்த்தை நடத்தினார். தகுதியுள்ள ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு கட்டாயம் இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.