ADDED : ஏப் 27, 2024 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மேலநெட்டூர் ஊராட்சிக்குட்பட்ட ஆலம்பச்சேரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 70 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து கட்டடம் கட்டி உள்ளனர்.
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் வருவாய்த் துறையினர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தனர். ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டடங்களை அகற்றக் கோரி வருகிற 29ம் தேதி ஆலம்பச்சேரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி முன் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

