/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழே கிடந்த பணம் ஆசிரியரிடம் ஒப்படைப்பு மாணவிக்கு பாராட்டு
/
கீழே கிடந்த பணம் ஆசிரியரிடம் ஒப்படைப்பு மாணவிக்கு பாராட்டு
கீழே கிடந்த பணம் ஆசிரியரிடம் ஒப்படைப்பு மாணவிக்கு பாராட்டு
கீழே கிடந்த பணம் ஆசிரியரிடம் ஒப்படைப்பு மாணவிக்கு பாராட்டு
ADDED : மார் 08, 2025 04:32 AM

மானாமதுரை : மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை என் கே என் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அதே ஊரைச் சேர்ந்த முத்துக்குமார் மகள் மூவிகா ஸ்ரீ 10, 5ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் நேற்று காலை பள்ளிக்கு வரும்போது ரோட்டில் ரூ.ஆயிரம் கிடந்துள்ளது. அந்த பணத்தை பள்ளிக்கு கொண்டு வந்து அங்கிருந்த ஆசிரியை சகாய மைக்கேல் சாந்தியிடம் விபரத்தை கூறி கொடுத்தார். ஆசிரியை பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுரு நாதனிடம் ஒப்படைத்தார். கீழே கிடந்த பணத்தை நேர்மையான முறையில் ஆசிரியையிடம் கொண்டுவந்து ஒப்படைத்த மாணவி மூவிகா ஸ்ரீயை பள்ளி வழிபாட்டு கூட்டத்தில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பாராட்டினர்.