/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விடுதிகளில் கிடைக்காத உணவுகள் மாணவர்கள் ஏமாற்றம்
/
விடுதிகளில் கிடைக்காத உணவுகள் மாணவர்கள் ஏமாற்றம்
ADDED : மார் 03, 2025 07:18 AM
காரைக்குடி : காரைக்குடி பகுதிகளில் உள்ள மாணவர் விடுதிகளின் உணவு பட்டியலின் அடிப்படையில் முறையாக உணவு வழங்கப்படவில்லை என மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மாவட்டத்தில் பிற்பட்ட, ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் விடுதி 80 க்கும் மேல் உள்ளன. பல விடுதிகளில் தூய்மை பணியாளர் மற்றும் இரவு காவலர், சமையலர் பணியிடம் காலியாக உள்ளன. இங்கு தங்கியுள்ள மாணவர்களுக்கு முட்டை, இறைச்சி உட்பட பட்டியல்படி வழங்கவில்லை. இது தவிர உரிய நேரத்தில் மாணவர்களுக்கு உணவு கிடைக்கவில்லை என மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மாணவர்கள் கூறியதாவது, இட்லி, பூரி, தோசை, சப்பாத்தி வகைகள் மூன்று எண்ணிக்கை மட்டுமே கொடுக்கின்றனர். அதற்கு மேல் கொடுப்பதில்லை. இறைச்சி முறையாக வழங்குவதில்லை. அலுவலர்களிடம் புகார் தெரிவித்தால் கண்டு கொள்வதே இல்லை என புகார் தெரிவிக்கின்றனர்.