/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடி அருங்காட்சியகத்தில் குவிந்த மாணவர்கள்
/
கீழடி அருங்காட்சியகத்தில் குவிந்த மாணவர்கள்
ADDED : மார் 02, 2025 05:40 AM

கீழடி: கீழடி அருங்காட்சியகத்தில் நேற்று ஏராளமான மாணவ, மாணவியர் பண்டைய கால பொருட்களை காண ஆர்வம் காட்டினர்.
கீழடியில் 2023, மார்ச் 5ம் தேதி அருங்காட்சியகம் திறக்கப்பட்டு தினசரி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அருங்காட்சியகத்தை கண்டு ரசித்து வருகின்றனர்.
நேற்று சனிக்கிழமை என்பதால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்தும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட வந்திருந்தனர்.
இரண்டாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் பற்றிய மெய்நிகர் காட்சி கூடத்தில் இரண்டு கேமராக்கள் வைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் காண வசதி செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கட்டட தொகுதிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் குறித்த விளக்கம் எல்.இ.டி., டி.வி.,க்களில் ஒளிபரப்படுவது சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.