/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு பஸ்சின் படியில் ஆபத்தான பயணம் செய்த மாணவர்கள்
/
அரசு பஸ்சின் படியில் ஆபத்தான பயணம் செய்த மாணவர்கள்
அரசு பஸ்சின் படியில் ஆபத்தான பயணம் செய்த மாணவர்கள்
அரசு பஸ்சின் படியில் ஆபத்தான பயணம் செய்த மாணவர்கள்
ADDED : ஆக 23, 2024 04:25 AM

தேவகோட்டை: அரசு டவுன் பஸ்கள் சமீப காலமாக பல இடங்களில் பழுதாகி விபத்தை சந்தித்து வருகிறது.
பஸ்களை சரியாக பராமரிக்காததால் பஸ் ஓடிக்கொண்டு இருக்கும் போதே மேல்டாப் கழன்று பறப்பது, படிகள் உடைவது, சீட் கழன்று பயணிகள் கீழே விழுவது, கண்ணாடி பெயர்ந்தும்,மேல் தகரம் உடைந்து மழைநீர் ஒழுகுவது என அடுக்கடுக்காக பிரச்னைகளை பயணிகள் தினமும் சந்தித்து வருகின்றனர். ஆனாலும் அரசு டவுன் பஸ்கள் நிலைமை தெரியாமல் பள்ளி மாணவர்கள் வேகமாக ஓடி படியிலும் கம்பியிலும் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். டிரைவர் கண்டக்டர் கண்டித்தாலும் கேட்பதில்லை. பெரிய அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் காலை மாலை நேரங்களில் கண்காணிக்க வேண்டும்.