/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கல்லலில் பசுந்தாள் உரப்பயிர் ஆய்வு
/
கல்லலில் பசுந்தாள் உரப்பயிர் ஆய்வு
ADDED : செப் 04, 2024 12:51 AM

காரைக்குடி : கல்லல் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பசுந்தாள் உரப்பயிரை வேளாண் துறையினர் ட்ரோன் மூலம் ஆய்வு செய்தனர்.
வேளாண் துணை இயக்குனர் மதுரைசாமி உதவி இயக்குனர் அழகுராஜா வேளாண் அலுவலர் பாலகணபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேளாண் துணை இயக்குனர் மதுரைசாமி கூறுகையில்: கல்லல் வட்டாரத்தில் 200 ஏக்கரில் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 2 ஆயிரத்து 280 கிலோ தக்கை பூண்டு மற்றும் ஆயிரத்து 720 கிலோ சனப்பு விதைகள் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.
ரசாயன உரங்கள் பயன்படுத்துவதால் மண்வளம் பாதிக்கப்பட்டு மகசூல் பாதிக்கும். பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்வதால் மண்ணின் உள்ள உயிர்ம கரிம சத்து அதிகரிக்கும். வேர் முடிச்சில் உள்ள பாக்டீரியாக்கள் காற்றில் உள்ள தழைச் சத்தை மண்ணில் நிலை நிறுத்துகிறது.
மண்ணின் கட்டமைப்பு மாறி காற்றோட்டம் கிடைக்கிறது. தற்போது வாரிவயல் மற்றும் எஸ்.ஆர். பட்டினம் பகுதிகளில் நன்கு வளர்ச்சி அடைந்த பசுந்தாள் உரப்பயிர்கள் மடக்கி உழவு செய்யும் பணி நடைபெற உள்ளது.