/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் ஆய்வு
/
பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் ஆய்வு
ADDED : ஏப் 03, 2024 06:44 AM
சிவகங்கை : திருப்புத்துார், காரைக்குடி சட்டசபை தொகுதியில் பதட்டமான ஓட்டுச்சாவடிகளை கலெக்டர், போலீஸ் பார்வையாளர், எஸ்.பி., ஆகியோர் ஆய்வு செய்தனர்.
சிவகங்கை லோக்சபா தொகுதியில் 6 சட்டசபையில் 1,873 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில் 160 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவை, இரு ஓட்டுச்சாவடிகள் மிக பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருதல், ஓட்டுப்பதிவு நாளான்று இருக்க வேண்டிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு செய்தனர்.
கலெக்டர் ஆஷா அஜித், தேர்தல் பார்வையாளர்கள் (பொது) ஹரீஸ், (போலீஸ்) ரோஹன் பி.கனேய், சிவகங்கை எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர். திருப்புத்துார் அருகே மல்லாக்கோட்டை அரசு ஆரம்ப பள்ளி, திருப்புத்துார் அரசு மேல்நிலை பள்ளி, காரைக்குடி செஞ்சையில் உள்ள ஓட்டுச்சாவடி உள்ளிட்ட ஓட்டுச்சாவடிகளில் ஆய்வு செய்தனர். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பால்துரை (காரைக்குடி), சரவணபெருமாள் (திருப்புத்துார்), தாசில்தார்கள் மாணிக்கவாசகம், தங்கமணி பங்கேற்றனர்.

