/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் வங்கியில் மானிய கடன்
/
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் வங்கியில் மானிய கடன்
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் வங்கியில் மானிய கடன்
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் வங்கியில் மானிய கடன்
ADDED : ஆக 15, 2024 03:40 AM
சிவகங்கை, : சிவகங்கை மாவட்டத்தில் மகளிர் குழு உறுப்பினர், அவர்களது குடும்பத்தினர், பெண் தொழில் முனைவோருக்கு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் மானியத்தில் கடனுதவி வழங்கப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இம்மாவட்டத்தில் காளையார்கோவில், தேவகோட்டை, மானாமதுரை ஆகிய 3 தாலுகாவிற்கு உட்பட்ட 124 ஊராட்சிகளில் 2019 நவ., ல் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் துவக்கப்பட்டது. தனிநபர் தொழில், குழு தொழில், உற்பத்தியாளர் குழு, கூட்டமைப்புகளை கிராமங்களில் உருவாக்குவதாகும். இத்திட்டம் மூலம் கிராமங்களில் உள்ள மகளிர் குழு உறுப்பினர், அவர்களது குடும்ப உறுப்பினர், பெண் தொழில் முனைவோருக்கு மானியத்தில் தொழில் கடன் வழங்கப்பட உள்ளது. பயனாளிகள் கடனை தவணை தவறாமல் செலுத்தினால், மானிய தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற www.vkp-tnrtp.org/citizenlogin என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் காளையார்கோவில், தேவகோட்டை, மானாமதுரையில் 124 ஊராட்சிகளில் 263 தொழில் முனைவோர்களுக்கு வங்கி மூலம் ரூ.9.76 கோடி கடன் வழங்கப்பட்டு, மானியமாக ரூ.2.93 கோடி பெற்றுள்ளனர். வட்டார அளவில் உள்ள திட்ட செயலாக்க அலகு அலுவலகத்தை தொடர்பு கொண்டு விபரம் பெறலாம். திட்ட மதிப்பீடு தொகை ரூ.15 லட்சத்திற்கு மேல் இருத்தல் வேண்டும்.
இப்பயனாளிகளுக்கு இணை மானிய கடன் 30 சதவீதம் பெற்றுத்தரப்படும். எனவே வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் மானியத்துடன் கூடிய கடன் பெற்று பயன் அடையலாம்.