/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாஸ்குலர் அறுவை சிகிச்சைக்கு டாக்டர் இல்லாததால் அவதி
/
வாஸ்குலர் அறுவை சிகிச்சைக்கு டாக்டர் இல்லாததால் அவதி
வாஸ்குலர் அறுவை சிகிச்சைக்கு டாக்டர் இல்லாததால் அவதி
வாஸ்குலர் அறுவை சிகிச்சைக்கு டாக்டர் இல்லாததால் அவதி
ADDED : செப் 13, 2024 05:14 AM
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் வாஸ்குலர் அறுவை சிகிச்சைக்கு டாக்டர் இல்லாததால் டயாலிசிஸ் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரியில் சிறுநீரகவியல் பிரிவில் டாக்டர் இல்லை. ஆனாலும் 14 டயாலிசிஸ் இயந்திரங்கள் உள்ளன. டாக்டர் ஒருவருக்கு பயிற்சி கொடுத்து அவர் மூலம் தினசரி 20 பேருக்கு டயாலிசிஸ் செய்யப்படுகிறது.
மாவட்டத்தில் சிறுநீரக பாதிப்புடன் இங்கு வரும் நோயாளிகளுக்கு முதலில் டயாலிசிஸ் செய்ய வாஸ்குலர் (ரத்தக்குழாய்) அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால் அதற்குரிய டாக்டர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் இல்லை. ஆகையால் டயாலிசிஸ் நோயாளிகளுக்கு முதலில் செய்யக்கூடிய வாஸ்குலர் அறுவை சிகிச்சை செய்ய மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கின்றனர்.
அவர்கள் அங்கு சென்று அறுவை சிகிச்சை செய்வதற்கு இரண்டு வாரத்திற்கு மேல் தங்க வேண்டியுள்ளது. இதனால் நோயாளிகள் சிரமம் அடைகின்றனர். சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் வாஸ்குலர் அறுவை சிகிச்சை செய்வதற்கான டாக்டரை நியமிக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.