/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆசிரியர்கள் அன்றாடம் கற்றால் சிறந்த மாணவர்களை உருவாக்கலாம் துணை வேந்தர் பேச்சு

ADDED : ஜூன் 01, 2024 04:47 AM

காரைக்குடி: ஆசிரியர்கள் அன்றாடம் கற்றுக் கொண்டால் தான் சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும் என குன்றக்குடி அடிகளார் மகளிர் கல்வியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழாவில் அழகப்பா பல்கலை., துணைவேந்தர் க. ரவி பேசினார்.
குன்றக்குடி அடிகளார் மகளிர் கல்வியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமையேற்றார். அழகப்பா பல்கலை துணைவேந்தர் க.ரவி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். நிர்வாக அலுவலர் ராமநாதன், முதல்வர் செலின் அமுதா வரவேற்றனர்.விழாவில் 170 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
அழகப்பா பல்கலை., துணைவேந்தர் க. ரவி பேசுகையில்: நாட்டின் முன்னேற்றத்திற்கு பெண் கல்வி அவசியம். குன்றக்குடிக்கும் அழகப்பா பல்கலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கல்வியிலும் பொருளாதாரத்திலும் பெண்கள் முன்னேற பல்வேறு கல்வி நிறுவனங்களையும், தொழிற் கூடங்களையும் உருவாக்கியதில் குன்றக்குடி மடம் முன்மாதிரியாக விளங்குகிறது. வருங்கால தலைமுறையை உருவாக்கக்கூடிய ஆசிரியர்கள் அன்றாடம் கற்றுக்கொண்டு தங்களை வளர்த்துக் கொள்வதோடு மாணவர்களையும் சிறந்தவர்களாக வழிநடத்த வேண்டும் என்றார்.