/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
/
ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : ஜூலை 04, 2024 01:26 AM

தேவகோட்டை: தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தேவகோட்டை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் மறியல் ஆர்பாட்டம் நடத்தினர்.
தொடக்கக் கல்வி துறையில் பணியாற்றும் 90 சதவிகித பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை எண் 243ஐ ரத்து செய்யவும், மாறுதலுக்கான கலந்தாய்வை நிறுத்தி வைத்தல் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அழகப்பன் தலைமையில் வகித்தார்.
ஒருங்கிணைப்பாளர் அன்பரசு பிரபாகரன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் புரட்சித்தம்பி, தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ராமராஜன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மன்ற மாவட்ட தலைவர் டேவிட் அந்தோணிராஜ், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ஜேசுராஜ், முன்னிலை வகித்தனர்.
அலுவலகம் வெளியே ஆர்பாட்டம் நடந்த போது அலுவலகம் உள்ளே மாறுதலுக்கான கலந்தாய்வை மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமரன் நடத்தினார். இதனைத் தொடர்ந்து ஆர்பாட்டம் நடத்திய ஆசிரியர்கள் அலுவலகம் உள்ளே சென்று மாவட்ட கல்வி அலுவலர் முன் அமர்ந்து கலந்தாய்வை நிறுத்த கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.