/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முடிகாணிக்கை பக்தர்களிடம் கட்டணம் வசூல் கூடாது கோயில் நிர்வாகம் தகவல்

ADDED : செப் 03, 2024 04:24 AM
இளையான்குடி : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் முடிக்காணிக்கை செலுத்த வந்தவர்களிடம் முடி திருத்தம் செய்தவர் பணம் பெற்ற விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இக்கோயிலில் நேற்று முன் தினம் முடி காணிக்கை செலுத்திய பக்தரிடம் முடி திருத்தம் செய்தவர் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் கூறியதாவது: இக்கோயிலில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவது வழக்கம். முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்காக முடி திருத்தும் பணி செய்யும் நபர் ஒருவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் ரூ.30 வழங்கப்படுகிறது.
முடி காணிக்கை செலுத்தும் பக்தர்கள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம். முடி காணிக்கை செய்த பக்தர்களிடம் பணம் பெற்றவர் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.